மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
சிக்கல்: மத்திய அரசின் வக்ப் வாரிய திருத்த சட்டத்தை கண்டித்தும் உடனடியாக சட்டத்தை திரும்ப பெறக் கோரியும் சிக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலாடி கிழக்கு தாலுகா செயலாளர் அம்ஜத் கான் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மயில்வாகனன், கலையரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் பச்சமால், ராமசாமி, சுப்பிரமணியன், ஜெயக்குமார், சிக்கல் ஜமாத் நிர்வாகி ஹாஜா, காங்., நிர்வாகி முனியசாமி பங்கேற்றனர்.