உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பரமக்குடியில் சுற்றி திரிந்த முகமூடி கொள்ளையர்கள்

 பரமக்குடியில் சுற்றி திரிந்த முகமூடி கொள்ளையர்கள்

போலீசார் சிசி.டிவி., மூலம் ஆய்வுபரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுற்றி திரிந்த முகமூடி கொள்ளையர்கள் குறித்து சி.சி.டிவி., கேமரா மூலம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பரமக்குடியில் பிப்., 25 அதிகாலை 2:00 மணியளவில் முகமூடி அணிந்த மூவர் சுற்றி வந்துள்ளனர். தொடர்ந்து பெருமாள் கோயில் பின்புறம் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க நுழைந்தனர். அதன்படி 2 நபர்கள் முகமூடியுடனும், ஒருவன் ஹெல்மெட் அணிந்தும் ஆயுதங்களுடன் சுற்றிவருவது சி.சி.டிவி.,யில் பதிவான வீடியோ காட்சிகள் பரமக்குடியில் பரவியது. போலீசார் கூறியதாவது: தேனி மாவட்டம் போடியில் இருந்து வந்ததாக சந்தேகிக்கப்படும் கொள்ளையர் பரமக்குடி, திருப்புல்லாணி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளனர். பரமக்குடியில் ஒரு டூவீலர் திருடு போய் உள்ளது. வீட்டை உடைத்த மர்ம நபர்கள் ரூ.சில ஆயிரங்களை எடுத்துச் சென்றுள்ளனர். போலீசார் ரோந்து சென்ற போது திருப்புல்லாணியில் தேனி மாவட்டம் போடியில் திருடப்பட்ட டூவீலர் பிடிபட்ட நிலையில் மர்ம நபர்கள் தப்பி விட்டனர். தொடர்ந்து பரமக்குடியில் ஒரு டூவீலரை திருடி சென்றுள்ளனர். குற்றவாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை