உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தி.மு.க., பிரமுகர் வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளை

தி.மு.க., பிரமுகர் வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளை

ப.வேலுார்:தி.மு.க., பிரமுகர் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், 1.02 லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே படமுடிபாளையத்தை சேர்ந்தவர் மயில் பிரபாகரன், 35; நாமக்கல் மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர். தோட்டத்து வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இதன் ஒரு பகுதியில் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணியளவில், முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், வீட்டின் கூரையை உடைத்து உள்ளே புகுந்தது. கட்சி அலுவலகத்தின் கதவை உடைத்து, 60,000 ரூபாய், மற்றொரு அறையின் பூட்டை உடைத்து, 42,000 ரூபாய் என, 1.02 லட்சம் ரூபாயை திருடிக்கொண்டு தப்பினர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை