உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பனைக்குளத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

 பனைக்குளத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

உத்தரகோசமங்கை: -உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் ஊராட்சி நல்லாங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், மக்கள் மாவட்ட நிர்வாகத்தை தேடி வந்த நிலை மாறி மாவட்ட நிர்வாகமே மக்களை தேடி முகாமிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடை பெறுகின்றன என்றார். தோட்டக்கலைத்துறை, மகளிர் திட்டம், பொது சுகாதாரத்துறை, வேளாண் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகளின் சார்பில் 69 பேருக்கு ரூ.8 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், வருவாய் கோட்டாட்சி யர் ஹபீபுர் ரகுமான், கீழக்கரை தாசில்தார் ராம சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ