மேலும் செய்திகள்
மக்கள் குறைதீர் கூட்டம்
01-Jul-2025
பரமக்குடி : பரமக்குடியில் மருத்துவ சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட அரசு இலவச மனை பட்டா நிலத்தில் பொது பயன்பாட்டிற்கான இடத்தை மீட்டுத் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி அருகே வேந்தோணி பகுதி குமரக்குடியில் 1985ம் ஆண்டு அரசு சார்பில் 83 மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. அங்கு விஸ்வநாத தாஸ் நகர் என்ற பெயரில் மருத்துவர் காலனி அமைத்து பராமரிக்கின்றனர்.இந்நிலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் இருப்பதால் சமூக விரோதிகள், திருடர்கள் பயத்தால் மற்றும் வீடுகள் கட்டி வாழும் பொருளாதார வசதி இல்லாத சூழலிலும் பலர் வீடு கட்டாமல் இருக்கின்றனர். மேலும் சமுதாயக்கூடம், விளையாட்டு திடல், சிறுவர் பூங்கா, நுாலகம், வழிபாட்டு தலம் என பொது பயன்பாட்டிற்கு அரசு சில இடங்களை ஒதுக்கியது.ஆனால் பொது பயன்பாட்டிற்கான இடத்தில் அரசு மாற்று நபர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது மேலும் இடம் ஒதுக்கும் சூழலில், அதனை மீட்டுத் தர பலமுறை கலெக்டர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நகர் தலைவர் மதியழகன், செயலாளர் முருகேசன், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் தனலெட்சுமி, மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் செல்வி உட்பட 50க்கும் மேற்பட்டோர் சப் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து இடத்தை மீட்க கோரிக்கை விடுத்தனர்.
01-Jul-2025