உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மனநலம் பாதித்த மும்பை நபர் மீட்டு உறவினரிடம் ஒப்படைப்பு

மனநலம் பாதித்த மும்பை நபர் மீட்டு உறவினரிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம்: மண்டபம் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை ரயில்வே போலீசார் மீட்டனர். அவர் குறித்து விசாரித்ததில் அவர் மும்பை, பாண்டு மேற்கு எல்.பி.எஸ்.மார்க், ஜெய்ஹோப்ஸ் பகுதியை சேர்ந்த சுரேஷ்சலைன் 53,எனத் தெரியவந்தது. விசாரணையில் திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் சுரேஷ்சலைன் மனைவி தனது கணவரை காணவில்லை, என புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுரேஷ்சலைன் மனைவியின் சகோதரர் ராகேஷ் என்பவருக்கு ரயில்வே போலீசார் தகவல் தெரிவிதது மண்டபம் ரயில் நிலையத்திற்கு வரவழைத்தனர். அவரிடம் சுரேஷ்சலைனை ஒப்படைத்தனர். மன நலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு ஒப்படைத்த ரயில்வே போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி