உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிக்கேல் அதிதுாதர் சர்ச் கொடியேற்றம்

மிக்கேல் அதிதுாதர் சர்ச் கொடியேற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி மிக்கேல் அதிதுாதர் சர்ச் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கிராமத்தார்கள் சார்பில் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பங்கு பாதிரியார் தினேஷ் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடிமரத்தில் விழா கொடி ஏற்றப்பட்டது. தினமும் மாலையில் நற்கருணை ஆராதனையும், குணமளிக்கும் வழிபாடும் நடக்கிறது. முக்கிய விழாவான தேர் பவனி விழா செப்.,28 ல் நடக்கிறது. செப்.,29 ல் காலை திருவிழா திருப்பலி நடைபெற்று, மாலையில் நடைபெறும் கொடி இறக்கத்துடன் விழா நிறை வடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை