பால் வேன் கவிழ்ந்து டிரைவர் காயம்
திருவாடானை: காரைக்குடியில் இருந்து ஆவின் பால் ஏற்றி வந்த வேன் திருவாடானையை நோக்கி சென்றது. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பாரதிநகர் அருகே செம்மறி ஆடுகள் சென்றதை கவனிக்காமல் திடீரென்று டிரைவர் பிரேக் போட்டார். இதனால் வேன் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் கவிழ்ந்தது. பாக்கெட்டுகள் உடைந்ததில் 100 லி., பால் வீணாகியது. மீதமுள்ள பாக்கெட்டுகள் மாற்று வேனில் ஏற்றிச் செல்லப்பட்டது. விபத்தில் வேன் டிரைவர் வின்சென்ட் அருள்ராஜ் 24, லேசான காயமடைந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.