உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் மினி மாரத்தான் -

பரமக்குடியில் மினி மாரத்தான் -

பரமக்குடி: பரமக்குடியில் த.ம.மு.க., நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் பிறந்தநாளை முன்னிட்டு, மினி மாரத்தான் போட்டிகள் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் துவங்கிய போட்டிகள் அதே இடத்தில் நிறைவடைந்தது. அப்போது சமூக ஒற்றுமை, விளையாட்டு ஆர்வம் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப் பட்டது மூன்று முதல் 12 வயது ஆண்கள், மூன்று முதல் 17 வயது பெண்கள், 13 முதல் 17 வயது ஆண்களுக்கான போட்டிகள் நடந்தன. ரொக்க பரிசுகள் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை 15 வீரர் களுக்கு வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ., கதிரவன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி துவக்கி வைத்தனர். த.ம.மு.க., மாவட்ட செயலாளர் ராஜபாண்டியன், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ