உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழத்துாவலில் போலி ஒத்திகை பயிற்சி

கீழத்துாவலில் போலி ஒத்திகை பயிற்சி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத்துறை சார்பில் போலி ஒத்திகை பயிற்சி நடந்தது. சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி தலைமை வகித்தார். அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் காப்பாற்றுவது, தண்ணீரில் சிக்குபவர்களை காப்பாற்றுவது, தீயை அணைப்பது, முதலுதவி அளிப்பது குறித்து செய்து காட்டினார். தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பேரிடர் காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை