உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பருவமழை விழிப்புணர்வு நிகழ்ச்சி

பருவமழை விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவாடானை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால் திருவாடானை தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் இந்த விழிப்புணர்வு திருவாடானை சமத்துவபுரம் மக்களிடையே நடந்தது. இந் நிகழ்ச்சியில் மழை வெள்ள பெருக்கு காலங்களில் மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் தடுக்கும் வழிமுறைகள், மின்சார சாதனங்களை கையாளும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை