உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் சேதமடைந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம்

கமுதியில் சேதமடைந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் சிரமம்

கமுதி : -கமுதி அருகே பேரையூர் விலக்கு ரோட்டில் இருந்து இலந்தைகுளம், நெறிஞ்சிப்பட்டி வழியாக கோவிலாங்குளம் ரோடு சேதமடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.கமுதி அருகே இலந்தைகுளம், நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மலட்டாறு வரத்து கால்வாய் கடந்து செல்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது.தற்போது பேரையூர் விலக்கு ரோட்டில் இருந்து இலந்தைகுளம், நெறிஞ்சிப்பட்டி வழியாக கோவிலாங்குளம் செல்லும் ரோடு உள்ளது.முதுகுளத்துாரில் இருந்து கோவிலாங்குளம் செல்வதற்கு குறைந்த துாரம் என்பதால் பலரும் இச்சாலையை பயன்படுத்திகின்றனர்.இந்நிலையில் இலந்தைகுளத்தில் இருந்து நெறிஞ்சிப்பட்டி செல்லும் ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி