உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் எம்.பி.,க்கள் தரிசனம்

ராமேஸ்வரம் கோயிலில் எம்.பி.,க்கள் தரிசனம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பார்லிமென்ட் நிலைக்குழுவின் எம்.பி., க்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மகாளய அமாவாசையையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பார்லிமென்ட் நிலைக்குழுவின் தலைவர் எம்.பி., பிஜிலால் தலைமையில் 7 எம்.பி.,க்கள் வந்தனர். இவர்களை ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ஹபீப் ரகுமான், கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல் ஜபார் வரவேற்றனர். பின் எம்.பி.,க்கள் அக்னி தீர்த்தம் மற்றும் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை தலையில் தெளித்து கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் தரிசித்தனர். அதன்பிறகுதனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவகம் சென்று பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை