உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் ரோடு 3 ஆண்டுகளில் சேதம்

முதுகுளத்துார் ரோடு 3 ஆண்டுகளில் சேதம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி சங்கரபாண்டி ஊருணியிலிருந்து கமுதியை இணைக்கும் ரோட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக சேதமடைந்துள்ளது. முதுகுளத்துார் பேரூராட்சி கமுதி ரோட்டில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு ரோடு வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக சங்கரபாண்டி ஊருணியில் இருந்து கமுதி ரோடு இணைப்பு பகுதி வரை புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாகஇவ்வழியில் லாரி, தண்ணீர் வாகனங்கள் சென்று அவ்வப்போது ரோட்டில் சிக்கிக் கொள்வது தொடர்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி ரோட்டில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இவ்வழியே நடந்து செல்வதற்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது மணல் ரோடாக மாறியுள்ளது. ஒருசில இடங்களில் சவடுமண் கொட்டப்பட்டு சமன் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறுவதால்டூவீலரில் கூட செல்ல முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். தரமற்ற ரோடு பணியால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி