மேலும் செய்திகள்
ரம்புட்டான் பழ ம் கிலோ ரூ.150
19-Jun-2025
இன்று மின் குறைதீர் கூட்டம்
24-Jun-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கோவிலாங்குளத்தில் குடும்ப பிரச்னை காரணமாக மகளை கொலை செய்த வழக்கில் தந்தை முனியசாமிக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் அளித்த தண்டனையை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உறுதி செய்தது. இதையடுதது முனியசாமி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தார்.கமுதி தாலுகா கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மனைவி லட்சுமி. இருவரும் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் 2011ல் இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் மனைவியை வெட்டினார். இதை தடுக்க வந்த மகள் முனிய ஜோதியை அரிவாளால் முனியசாமி வெட்டியதில் அவர் இறந்தார்.இந்த வழக்கில் ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முனியசாமி தரப்பில் மேல்முறையீடு செய்தனர்.விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளைபத்தாண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து கீழமை நீதிமன்றம் அளித்ததண்டனையை ஜூன் 9ல் உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து முனியசாமி நேற்று ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை கோவிலாங்குளம் போலீசார் கைது செய்தனர்.
19-Jun-2025
24-Jun-2025