கள்ளகாதலியின் தாய் கொலை கள்ளக்காதலனுக்கு வலை
கேணிக்கரை:மகளுடனான கள்ளக்காதலை கைவிட சொன்ன தாயை, அரிவாளால் வெட்டி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் போக்குவரத்து நகரைச் சேர்ந்தவர் திவ்யா, 21. இவரது கணவர் பாண்டியராஜ். சமீபத்தில் விபத்தில் இறந்தார். இரு குழந்தைகளுடன் தாய் கருப்பாயி, 45, வீட்டில் திவ்யா வசித்தார். ஆறு மாதங்களுக்கு முன், திவ்யாவுக்கும், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்த கருப்பசாமி, 23, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கருப்பசாமி அடிக்கடி திவ்யா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். கடந்த வாரம் கருப்பாயி வீட்டிற்கு சென்ற கருப்பசாமி, தனக்கும், திவ்யாவுக்கும் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். கருப்பாயி மறுத்ததுடன், மகளுடனான கள்ளக்காதலை கைவிட எச்சரித்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு கருப்பாயியை, கருப்பசாமி அரிவாளால் சரமாரியாக வெட்டியதில், கருப்பாயி இறந்தார். கேணிக்கரை போலீசார் கருப்பசாமியை தேடி வருகின்றனர்.