உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் ஊருணிகளில் கழிவு நீர். சுகாதாரக்கேடு! துர்நாற்றம், கொசு உற்பத்தியால் அவதி

ராமநாதபுரம் ஊருணிகளில் கழிவு நீர். சுகாதாரக்கேடு! துர்நாற்றம், கொசு உற்பத்தியால் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சி கட்டுபாட்டில் உள்ள ஊருணிகள் சரிவர பராமரிக்கப்படாமல் கழிவுநீர் கலந்தும், குப்பை தொட்டியாகியதால் சுகாதாரக்கேடு, கொசுத்தொல்லையால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் வறண்ட மாவட்டம் என்பதால் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க ஏராளமான ஊருணிகள் வெட்டப்பட்டுள்ளன. ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மட்டும் 23 ஊருணிகள் உள்ளன. இவை நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கின்றன. மாவட்டத்தை பொறுத்தமட்டில் நிலத்தடி நீர் 20 முதல் 40 அடியில் கிடைத்தாலும் அது உப்பு நீராகவே உள்ளது. இதனால் மக்கள் அன்றாடம் குடிநீர், சமையல் செய்வதற்கு காவிரி குடிநீர், சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதுராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ஏராளமான ஊருணிகள் உள்ளன. பெரும்பாலான ஊருணிகள் பராமரிக்கப்படாமல் அதன் அடையாளத்தை இழந்துள்ளன.குறிப்பாக குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள முகவை ஊருணி, செம்மங்குண்டு ஊருணி, லட்சுமி ஊருணி, நீலகண்டி ஊருணி உள்ளிட்ட பெரிய ஊருணிகளில் குப்பை, சாக்கடை நீர் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது.கரைப்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. துர்நாற்றம், கொசுத்தொல்லையால் மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர். இதனால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் போன்ற நோய்தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே ஊருணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையை பலப்படுத்தி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வாரி சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி