உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய நுகர்வோர் தின வார விழா

தேசிய நுகர்வோர் தின வார விழா

கீழக்கரை: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தின வார விழா நடந்தது. கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. முதல்வர் சுமையா தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் ஜாஸ்மின் முன்னிலை வகித்தார். நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கத் தலைவர் செய்யது இப்ராஹிம் பங்கேற்று விளக்கினார். ராமநாதபுரம் நுகர்வோர் நலச் சங்கம் லதா, வட்ட வழங்க அலுவலர் சாமுண்டீஸ்வரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ