உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

பரமக்குடி: ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியையொட்டி ராணுவ வீரர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் பா.ஜ., உள்ளிட்ட பல கட்சி மற்றும் ஹிந்து அமைப்பினர் சார்பில் பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. ஆபரேஷன் சிந்துார் வெற்றியை பெற்றுக் கொடுத்த ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பரமக்குடியில் தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. பரமக்குடி சந்தை கடையில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட், ஆர்ச், காந்தி சிலை, பெரிய பஜார் வழியாக நகராட்சி முன்பு நிறைவடைந்தது. பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட துணை தலைவர் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், வக்கீல் பிரிவு பிரபு, நகர் தலைவர் ரவி, அ.தி.மு.க., முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் ஜெய்சங்கர், அ.ம.மு.க., நகர் செயலாளர் சத்யமூர்த்தி, ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை