உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

சாயல்குடி: சாயல்குடியில் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், மத்திய அரசு மற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக, நன்றி தெரிவித்து தேசியக்கொடி ஏந்தியவாறு ஊர்வலம் நடந்தது.சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோஷங்கள் முழங்கியபடி மத்திய அரசு மற்றும் ராணுவ வீரர்களின் வீரத்தை போற்றியவாறு சென்றனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் ராஜசேகர பாண்டியன் தலைமை வகித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் அஜ்மல்கான் முன்னிலை வகித்தார். மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.* ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் மண்டபம் மேற்கு ஒன்றியம் பா.ஜ., அழகன்குளம் கிளைக்கழகம் சார்பாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது. மேற்குஒன்றியத் தலைவர் கோசாமணி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.*திருப்புல்லாணி: ஒன்றிய பா.ஜ., சார்பில் போரில் வெற்றி பெற்ற இந்திய ராணுவத்தை பாராட்டியும், மத்திய அரசின் வீர தீரத்தை போற்றியும் தேசியக் கொடி ஏந்தி ஊர்வலம் நடந்தது.முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் மங்களேஸ்வரன், முன்னாள் ஒன்றிய தலைவர் பிரபாகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி