உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேசிய சப் ஜூனியர் ஹாக்கி போட்டி; தமிழக அணிக்கு ராமநாதபுரத்தில் பயிற்சி

தேசிய சப் ஜூனியர் ஹாக்கி போட்டி; தமிழக அணிக்கு ராமநாதபுரத்தில் பயிற்சி

ராமநாதபுரம்; தேசிய அளவிலான சப் ஜூனியர் ஹாக்கிப்போட்டியில் பங்கேற்க உள்ளவீரர்களுக்கு ராமநாதபுரம் வேலுமாணிக்கம் செயற்கை இழை ஹாக்கிமைதானத்தில் ஜூலை 20 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது.15வது சப் ஜூனியர் ஆண்கள் தேசிய ஹாக்கிப் போட்டி ஜூலை 27முதல் ஆக.,7 வரை சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் சர்வதேசஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் பங்கேற்கஉள்ள தமிழக அணிக்கு பயிற்சி முகாம் ராமநாதபுரம் மாவட்டவிளையாட்டு மேம்பாட்டு ஆணையகத்தின் வேலு மாணிக்கம்செயற்கை இழை ஹாக்கிமை தானத்தில் நடக்கிறது.ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடுமூலம் நியமிக்கப்பட்டுள்ளபுதுக்கோட்டைமாவட்டத்தை சேர்ந்த தலைமை பயிற்சியாளர் குணாளன்,சென்னையை சேர்ந்ததுணை பயிற்சியாளர்சண்முகம் ஆகியோர் 29 வீரர்களுக்கும் ஜூலை 20 வரை பயிற்சி அளிக்கின்றனர்.இவர்களில் இருந்து தமிழக அணிக்கு 18 பேர் தேர்வுசெய்யப்பட உள்ளனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்டவிளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், ஹாக்கி சங்கச் செயலாளர்கிழவன் சேதுபதி, தலைவர் செல்லதுரை அப்துல்லா, நிர்வாகி டாக்டர்சின்னத்துரை அப்துல்லா செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !