உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இயற்கை எரிவாயு கசிவு விபத்து  தடுப்பு  பாதுகாப்பு ஒத்திகை

இயற்கை எரிவாயு கசிவு விபத்து  தடுப்பு  பாதுகாப்பு ஒத்திகை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ விபத்து தடுப்பு குறித்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்ச்சி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி.., சார்பில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய் வழியாக பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு பனைக்குளம் அருகில் சோகையன் தோப்பு பகுதியில் குழாயில் விரிசல் ஏற்பட்டு இயற்கை எரிவாயு கசிவு ஏற்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. ராமநாதபுரம் அருகே வாணியில் தனியார் இயற்கை எரிவாயு சேகரிப்பு விநியோக நிறுவனம், மாவட்ட நிர்வாகம் இணைந்து ராமேஸ்வரம் ரோட்டில் இயற்கை எரிவாயு கசிவு பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜித் சிங் காலோன் துவக்கி வைத்தார். அப்போது இயற்கை எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வரும் வாகனம் எதிரில் வந்த வாகனத்துடன் மோதி விபத்து ஏற்படும் போது காஸ் லீக் ஆகாமல் உடனடியாக வீரர்கள் அசம்பாவிதம் இல்லாமல் தடுத்து, ஆம்புலன்ஸ் பணியாளர்கள், தீயணைப்புத் துறையினரும் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தினர் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்த பாதுகாப்பு ஒத்திகையில் செய்து காண்பித்தனர். ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், தீயணைப்புதுறை ராமநாதபுரம் மாவட்ட உதவி அலுவலர் கோமதி அமுதா, இயற்கை எரிவாயு மனிதவள மேலாளர் ஜெயபால் சுப்பிரமணியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை