புதிய மின்கம்பம் மாற்றம்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே அரப்போது கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடலாடி துணை மின்நிலையத்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தின் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது.கிராமத்தில் மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கடலாடி துணை மின்நிலைய அதிகாரிகள் அரப்போது கிராமத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்திற்கு பதில் புதிய மின்கம்பத்தை மாற்றி அமைத்தனர். இதனால் கிராம மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.