மேலும் செய்திகள்
காவிரி குடிநீர் குழாய் உடைப்பு சரிபார்ப்பு
11-Aug-2025
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே ஏனாதியில் இருந்து கிடாத்திருக்கை செல்லும் தார்ரோடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதுகுளத்துார் அருகே ஏனாதி, கிடாத்திருக்கை, கொண்டுலாவி ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் மக்கள் சரக்கு வாகனம், டூவீலரில் முதுகுளத்துார் செல்கின்றனர். ஏனாதியில் இருந்து கிடாத்திருக்கை செல்லும் ரோடு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது வரை பராமரிப்பு பணி செய்யப்படாமல் இருந்தது. இவ்வழியே நடந்து செல்லக் கூட முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக இருப்பதால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் பலமுறை படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2.73 கி.மீ., இரண்டு சிறுபாலங்கள் வசதியுடன் ரூ.1.26 கோடியில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.தற்போது பணிகள் முடிந்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
11-Aug-2025