வி.ஏ.ஓ., துணை சுகாதார நிலையத்தில் மின்வசதி இல்லை: பணியாளர்கள் அவதி
தொண்டி : தொண்டி அருகே நம்புதாளையில் வி.ஏ.ஓ., துணைசுகாதார நிலையம், கிராம சேவை மையம், மீனவ மகளிர் சேவை ஆகிய நான்கு அலுவலகங்களில் மின் வசதி இல்லாததால் அன்றாட பணிகள் வெகுவாக பாதிக்க பட்டுள்ளது. நம்புதாளை ஊராட்சி அலுவலக வளாகத்தில் ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., துணை சுகாதார நிலையம், கிராம சேவை மையம், மீனவ மகளிர் சேவை ஆகிய அலுவலகங்கள் இயங்கி வந்தன. இந்த அலுவலகங்களுக்கு ஊராட்சி அலுவலகத்திலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு புதிய ஊராட்சி அலுவலகம் கட்டடம் கட்டபட்டு அங்கு ஊராட்சிஅலுவலகம் மாற்றபட்டது. இதனால் பழைய ஊராட்சி அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் துண்டிக்கபட்டு புதிய ஊராட்சி அலுவலகத்திற்கு மின் இணைப்பு கொடுக்கபட்டது. மின்சாரம் இல்லாததால் தற்போது நான்கு அலுவலகங்களும் போதிய வெளிச்சமின்றி இருட்டாக உள்ளது. இதனால் அலுவலர்கள் பகல் நேரத்திலே வேலை செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். மழைக் காலங்களில் கதவை மூடிவிட்டால் வெளிச்சமே இருக்காது. நான்கு அலுவலகங்களுக்கும் பல்வேறு வேலையாக வருபவர்களும் பாதிக்க படுகின்றனர். இந்த அலுவலகங் களுக்கு தனியாக மின்சாரம் வழங்க சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.