உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தங்க கவசம், வாழை மரம் தேவையில்லை: சீமான் கருத்து

தங்க கவசம், வாழை மரம் தேவையில்லை: சீமான் கருத்து

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு சீமான் மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது: அரசியலை வியாபாரம் ஆக்கக் கூடாது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியவர் தேவர். மனிதனை திறமையை வைத்து தான் மதிப்பிட வேண்டும். ஒருவரது ஜாதியை வைத்து மதிப்பிடக்கூடாது என்பதை வலியுறுத்தியவர் தேவர். அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்து தெய்வமாக போற்றப்படுகிறார். அவரை சிறுமைப்படுத்தும் விதமாக அவரது நினைவிடம் நுழைவுப் பகுதியில் அரசியல் கட்சியினர் கொடிகள் கட்டக்கூடாது என வலியுறுத்தியும், அதையும் மீறி ஆளுங்கட்சியான தி.மு.க., வினர் மட்டும் கொடி கட்டி உள்ளனர். மேலும் குலை கூட விடாத வாழை மரங்களை வெட்டி வரிசையாக கட்டி உள்ளனர். இதனை எடுத்து செல்ல மக்கள் போட்டி போடுகின்றனர். இந்நிலை மாற வேண்டும். தேவர் தங்கக் கவசம், வெள்ளிக்கவசம், வாழை மரத் தோரணங்களை கேட்டாரா, அவர் எளிமையாக வாழ்ந்து மக்கள் மத்தியில் தெய்வமாக போற்றப்படுகிறார். எனவே இனி வரும் காலங்களில் ஆடம்பரங்களை தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும. என்றார்.

வைகோ பேட்டி

சீமான் பேசிக்கொண்டு இருக்கும் போதே வைகோ வந்தார். இருவரும் நலம் விசாரித்தனர். அதன்பின் வைகோ கூறியதாவது: 49 ஆண்டாக தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்தவர் தேவர். தென்னாட்டின் நேதாஜியாக வலம் வந்தவர். தேவேந்திர மக்கள், முக்குலத்து மக்கள் என அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையாக இருக்க வலியுறுத்தினார். சீமான் முயற்சிகள் வெற்றி பெறட்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ