உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயல்படாத கேமராக்கள் போலீசார் திணறல்

செயல்படாத கேமராக்கள் போலீசார் திணறல்

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமரா பழுதடைந்து உள்ளதால், அப்பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய போலீசாருக்கு சிரமப்படுகின்றனர்.அழகன்குளம், ஆற்றங்கரை விலக்கு ரோட்டில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசார் நியமிக்கப்படவில்லை. அப்பகுதியில் பொருத்தப்ட்டுள்ள சி.சி.டி.வி., கேமராவும் பராமரிக்கப்படாததால், கேமரா செயல்பாடின்றி உள்ளது. சில வாரங்களாக அழகன்குளம், சுற்றுகிராமங்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக அழகன்குளம் நாடார் வலசை பாலமுருகன் கோயில் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகள் அதே பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளிலும் திருட்டுத் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பினர். சில வாரங்களுக்கு முன்பும், தேர்போகியில் வட மாநில தொழிலாளர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டனர். கேமரா பதிவு இன்றி போலீசார் குற்றவாளிகளை கண்டறிய சிரமப்படுகின்றனர்.கூடுதல் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தவும், பழுதடைந்த கேமராக்களை சீரமைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை