மு.வாகைக்குளத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்
முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே மு.வாகைக்குளத்தில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் நடந்தது. ஜமாத் தலைவர் காதர் முகைதீன் தலைமை வகித்தார். கல்விக் குழு தலைவர் காஜா நஜி முதீன், தாளாளர் ஜஹாங்கீர், பேரூராட்சி தலைவர் ஷாஜகான், தலைமை யாசிரியர் காஜா நிஜா முதீன் குரைசி முன்னிலை வகித்தனர். கிராமத்தில் கோயில், பள்ளி வளாகம், நீர் நிலைப் பகுதிகளை சுத்தம் செய்து மரக்கன்று நடுதல், போதைப் பொருள் இல்லாத விழிப்புணர்வு ஊர்வலம், கால்நடை மருத்துவ முகாம், பேரிடர் மேலாண்மை தீ விபத்து மற்றும் தடுப்பு பயிற்சி, மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் குறித்து என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நுாருல் அமீன் செய்தார்.