உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சத்துணவு ஓய்வூதியர்கள் மனு

சத்துணவு ஓய்வூதியர்கள் மனு

ராமநாதபுரம்; சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சிறப்பு பென்ஷன் தொகை வழங்குமாறு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் மனு அளித்தனர். மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது: கடந்த சட்டசபை தேர்தலின் போது சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் பென்ஷன் முறைப்படுத்தப்படும் என தி.மு.க., வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிறப்பு பென்ஷன் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் நாகராஜன், பொருளாளர் போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ