உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புது டவுன் பஸ்களில் வெடிக்கும் பழைய டயர்

புது டவுன் பஸ்களில் வெடிக்கும் பழைய டயர்

பரமக்குடி: பரமக்குடியில் புது பஸ்களில் பழைய டயர் பயன்பாட்டால் அவை வெடித்து 'பிரேக் டவுன்' ஆவதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.பரமக்குடி பணிமனையில் இருந்து 30க்கும் மேற்பட்ட டவுன் பஸ் கல்இயக்கப்படுகிறது. தொடர்ந்து போகலூர், நயினார்கோவில், பரமக்குடி ஒன்றியம் உட்பட முதுகுளத்துார், சாயல்குடி உள்ளிட்ட இடங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய டவுன் பஸ்கள் பரமக்குடி டிப்போவிற்கு வழங்கப்பட்டது. இருப்பினும் பழைய பஸ்கள் பலவும் இயங்கி வருகின்றன. நேற்று பரமக்குடியில் இருந்து சென்ற 26ம் எண் டவுன் பஸ் சாயல்குடி சென்று திரும்பியது. அப்போது முதுகுளத்துார் ரோட்டில் முன்பக்க டயர் வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற ஊழியர்கள் மீண்டும் பழைய டயர் ஒன்றை இணைத்து பஸ்சை இயக்கி கொண்டு சென்றனர்.இந்நிலையில் பெரும்பாலான டவுன் பஸ்களின் டயர்கள் புதிதாக இல்லாமல், பயன்படுத்தப்பட்ட பழைய டயர்களை இணைத்து அனுப்பி விடுகின்றனர். தொலைதுார பஸ்களை விட டவுன் பஸ்களில் தான் அதிக அளவில் மக்கள் பயணிக்கின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி அரசு பஸ்களை பிரேக் டவுன் ஆகாமல் விபத்திலிருந்து காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி