உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலர்கள் மோதல் ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல் ஒருவர் பலி

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் மரைக்காயர் தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது 58. நேற்று மதியம் அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகை முடித்து விட்டு டூவீலரில் கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பினார். அப்போது எதிரில் மற்றொரு டூவீலரில் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் மஞ்சகுடியை சேர்ந்த பாலமுருகன் மோதினார். இதில் சாகுல்ஹமீது இறந்தார். காயமடைந்த பாலமுருகன் மணமேல்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ