மேலும் செய்திகள்
விபத்தில் இருவர் பலி
20-Sep-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் கடலாடி ரோடு நீதிமன்றம் விலக்கு ரோடு அருகே வந்த டூவீலர் மீது கார் மோதியதில் விவசாயி ராஜேந்திரன் பலியானார். கடலாடி அருகே பாடுவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் 55. விவசாயம் செய்கிறார். முதுகுளத்துாரில் இருந்து கிராமத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது முதுகுளத்துார் நீதிமன்றம் விலக்கு ரோடு அருகே கடலாடியில் இருந்து முதுகுளத்துார் வந்து கொண்டிருந்த கார் டூவீலர் மீது மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்தில் இறந்தார். காரில் பயணம் செய்த கேரளாவை சேர்ந்த முகமது சலீம், அப்துல்லா இருவரும் காயம் அடைந்து முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரிக்கிறார்.
20-Sep-2025