உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நம்ம ஊரு புத்தகத் திருவிழா துவக்கம்

நம்ம ஊரு புத்தகத் திருவிழா துவக்கம்

பரமக்குடி: பரமக்குடியில் மக்கள் நுாலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 3வது ஆண்டு நம்ம ஊரு புத்தகத் திருவிழா நேற்று துவங்கியது. வரவேற்பு குழு தலைவர் சேகர் தலைமை வகித்தார். மக்கள் நுாலகம் தலைவர் சந்தியாகு, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் காந்தி, கிளை தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர். வரவேற்பு குழு செயலாளர் பசுமலை வரவேற்றார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, தாசில்தார் வரதன் பங்கேற்று பேசினர். வரவேற்பு குழு துணைச் செயலாளர் ராஜா தொகுத்து வழங்கினார். பரமக்குடி ராஜா மஹாலில் தொடர்ந்து ஆக.,3 வரை 10 நாட்கள் புத்தகக் கண்காட்சி, விற்பனை நடக்கிறது. ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் இரவு சொற்பொழிவு, பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை