உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் தேவை

சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் தேவை

சாயல்குடி: சாயல்குடி பஸ் ஸ்டாண்டிற்கு ராமேஸ்வரம், துாத்துக்குடி, திருச்செந்துார், கன்னியாகுமரி, மதுரை, அருப்புக்கோட்டை, முதுகுளத்துார், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்லும் பிரதான பஸ் ஸ்டாண்டாக விளங்குகிறது.பயணிகளின் பாதுகாப்பிற்கும் தொடர் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கும் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் அத்தியாவசிய தேவையாக உள்ளது.சாயல்குடி வணிகர் சங்க துணைச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: சாயல்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே சந்தை திடல் உள்ளது. சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் நிலையில் பயணிகள் பாதுகாப்பிற்கு சாயல்குடி போலீஸ் ஸ்டேஷன் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் பஸ் ஸ்டாண்டில் நடக்கும் ஒரு சில குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கும் பயனுள்ளதாக அமையும்.எனவே விஷயத்தில் சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து புறக் காவல் நிலையம் அமைக்க வேண்டும். அதற்கான இடம் தயார் நிலையில் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி