உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கன்னியாகுமரி செல்லும் பனை ஓலை பாய்கள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுகிறது

கன்னியாகுமரி செல்லும் பனை ஓலை பாய்கள் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுகிறது

திருப்புல்லாணி : பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பச்சை சாரோலையில் இருந்து ஓலை பாய்கள் முடையப்படுகின்றன.திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களான சின்னாண்டி வலசை, புதுக்கோவில், தினைக்குளம், மொத்திவலசை, மேதலோடை உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக பனை ஓலைகள் மூலம் பாய்கள் முடையப்படுகின்றன. ஆறடி நீளம், இரண்டு அடி அகலம் கொண்ட பனை ஓலை பாய்கள் ரூ.40 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. புதுக்கோவில் பனை ஓலை தயாரிக்கும் மொத்த வியாபாரி செல்வராஜ் கூறியதாவது: பனை மரத்தில் இருந்து கிடைக்கும் சாரோலையில் இருந்து பாய் முடையப்படுகிறது. இங்கிருந்து மொத்தமாக 25 எண்ணிக்கையில் ஒரு பண்டல்களாக அடுக்கப்பட்டு துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மீன் மார்க்கெட், பூ மார்க்கெட் மற்றும் சமையல் கூடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் வாங்கி அனுப்பி வைக்கப்படுகிறது.கருப்பட்டி, புளி, கருவாடு, பூக்கள் உள்ளிட்டவைகள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பனை ஓலைப் பெட்டிகள்முடையப்படுகிறது. பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் ஓலை பெட்டிகள் சிறப்பு வாய்ந்தவை. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மண்ணிற்கு மட்கும் தன்மை கொண்ட பனை ஓலையால் செய்யக்கூடிய பொருட்களை நம்பி ஏராளமானோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைகின்றனர். இப்பகுதியில் முடையப்படும் பனை ஓலைகள்தேவை என விரும்பி கேட்டு கன்னியாகுமரி வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ