உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோவையில் கமகமக்கும் பாம்பன் கருவாடு விற்பனை

கோவையில் கமகமக்கும் பாம்பன் கருவாடு விற்பனை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கருவாடுக்கு கோவையில் கிராக்கி உள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.பாம்பனில் உள்ள 300 விசைப்படகுகள், நாட்டுப்படகு மீனவர்கள் பெரும்பாலும் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்கின்றனர். மீனவர்கள் வலையில் ருசியான சீலா மீன், பாறை மீன், பண்ணா மீன், விளை மீன் உள்ளிட்ட பலரக மீன்கள் சிக்குகிறது. இதில் 90 சதவீதம் மீன்களை ஐஸ்சில் பதப்படுத்தி கேரளா, கோவை, பொள்ளாச்சி மீன் மார்க்கெட்டுக்கு பாம்பன் மீனவர்கள் அனுப்புகின்றனர்.மீதமுள்ள 10 சதவீதம் ஐஸ்சில் பதப்படுத்தாமல் பண்ணா, கத்தாளை, நகரை, சூவாரை ஆகிய மீன்களை பாம்பன் வியாபாரிகள் உப்பில் பதப்படுத்தி தரையில் விரிப்புடன் காய வைக்கின்றனர். இந்த கருவாடுகள் ருசியாக உள்ளதால் கோவையில் அசைவப் பிரியர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் கோவை கருவாடு வியாபாரிகள், கருவாட்டின் ரகத்திற்கு ஏற்ப கிலோ ரூ. 150 முதல் 300 வரை விலைக்கு வாங்கி செல்கின்றனர். கோவையில் கமகமக்கும் கருவாடு விற்பனை படுஜோராக உள்ளதால் எதிர்பார்த்த வருவாய் கிடைப்பதாக பாம்பன் வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை