உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாண்டியர் கால செப்பு பட்டயம் பரமக்குடி அருகே கண்டெடுப்பு

பாண்டியர் கால செப்பு பட்டயம் பரமக்குடி அருகே கண்டெடுப்பு

ராமநாதபுரம்:பரமக்குடி அருகில், பாண்டியர் கால செப்பு பட்டயம் கண்டெடுக்கப்பட்டது. சுந்தரவல்லியம்மன் கோவில் பூசாரி தங்கவேலுவிடம் ஒரு செப்பு பட்டயம் இருப்பதாக, கமுதக்குடி சுப்பிரமணியன் என்பவர் தகவலில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: செப்பு பட்டயத்தின் எழுத்தமைப்பை கொண்டு இதன் காலம் கி.பி., 1618 என தெரிகிறது. இதில், கமுதக்குடி ஊரின் பெயர் கமுதாபுரி என உள்ளது. மன்னர் குலசேகர பாண்டியன் எழுதிய இந்த பட்டயத்தில், கமுதாபுரி மேலேந்தல் அருகில் கண்மாய் கீழ்மடை பாசன பகுதி நிலம், கமுதக்குடி பிடாரி சுந்தரவல்லி பராசக்தி கோவில் நித்திய பூஜைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வானர்வீரவகை வளநாடு எனப்படும் இப்பகுதியை குலசேகரபாண்டியன் ஆட்சி செய்திருக்கலாம். இவ்வூர் அருகில் மேலப்பெருங்கரை கோவிலில், 1674-ம் ஆண்டு கல்வெட்டின்படி, திருமலை சேதுபதியின் காலத்திற்கு முன் வரை, பாண்டியர்கள் இப்பகுதியை ஆட்சி செய்ததாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ