உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்பது மக்களின் எண்ணம் பன்னீர்செல்வம் பேட்டி

அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்பது மக்களின் எண்ணம் பன்னீர்செல்வம் பேட்டி

ராமநாதபுரம்: -''அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பது மக்களின் எண்ணமாக உள்ளது ''என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் அவர் கூறியதாவது: விஜய்க்கு எனது வாழ்த்துக்களை சொல்லிவிட்டேன். அடுத்தடுத்து அவரது நிலைப்பாடு செயல் பாட்டை பொறுத்துத்தான் கருத்து சொல்ல முடியும். தமிழக மக்களை பொருத்த வரை அ.தி.மு.க., ஒன்றிணைந்தால் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்பது ஒட்டு மொத்த மக்களின் எண்ணமாக உள்ளது. எனவே 2026ல் எங்களை இணைக்காவிட்டால் நாங்கள் 2024ல் நடந்தது போல் நல்ல முடிவாக எடுப்போம். ராமநாதபுரம் மக்கள் விரும்பினால் மீண்டும் போட்டியிடுவேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ