உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் முடங்கிய புறக்காவல் நிலையம்: தகவல் பலகையால் ஆபத்து

ராமேஸ்வரத்தில் முடங்கிய புறக்காவல் நிலையம்: தகவல் பலகையால் ஆபத்து

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் பயன்பாடற்ற புறக்காவல் நிலையத்தில் தகவல் பலகை உடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்திறங்குகின்றனர். இவர்களின் பாதுகாப்புக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.துவக்கத்தில் இங்கு காவலர்கள் பணிபுரிந்து சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சரி செய்தனர். காலப்போக்கில் இங்கு யாரும் பணியில் இருப்பதில்லை. இதனால் புறக்காவல் நிலைய பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்தும், உள்ளே துாசி படிந்து அலங்கோலமாய் கிடக்கிறது. மேலும் புறக்காவல் நிலையத்தை சுற்றியுள்ள தகவல் பலகை உடைந்து தொங்குவதால் நிழலுக்கு நிற்கும் பயணிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே புறக்காவல் நிலையத்தை பராமரித்து 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் இருக்க எஸ்.பி, உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ