உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி ஏட்டு ‘சஸ்பெண்ட்’

பரமக்குடி ஏட்டு ‘சஸ்பெண்ட்’

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு அனீஸ்குமார் 30. இவர் பார்த்திபனுார் போலீஸ் ஸ்டேஷனில் மாற்றுப்பணியில் இருந்துள்ளார். பணிமுடிந்து டூவீலரில் பரமக்குடிக்கு சாதாரண உடையில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெண்ணுடன் டூவீலரில் சென்றவரை மிரட்டி தாக்கியுள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அனீஸ்குமார் மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார். ராமநாதபுரம் எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத், ஏட்டு அனீஸ்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை