உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூதகி வாகனத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன்

பூதகி வாகனத்தில் பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன்

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி விழாவில் பூதகி வாகனத்தில் அம்மன் உலா வந்தார்.நேற்று காலை அம்மன் முருகன் அலங்காரத்தில் பட்டு பல்லக்கில் அமர்ந்து உலா வந்தார். மாலை வெள்ளி சிங்க வாகனத்தில் பாரதி நகர் சென்று திரும்பினார். இன்று அன்ன வாகனத்தில் உலாவரும் அம்மன், நாளை காலை காளி அலங்காரத்தில் சின்ன கடைவீதி செல்கிறார்.அங்கு மாலை 5:00 மணிக்கு இரண்டு மாடுகள் பூட்டிய வண்டியில் மாகாளி வேடமிட்டு உலா வருகிறார். தினமும் பக்தர்கள் மாவிளக்கேற்றி தரிசித்து வருகின்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ