உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவ விழாவில் குதிரை வாகனத்தில் சுவாமி பவனி நடந்தது.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் வைகாசி வசந்த விழாவையொட்டி வசந்த மண்டபத்தில் தாயார், பெருமாள் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தனர்.வசந்த மண்டப தீர்த்த தொட்டியில் நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து மாலை பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் வீதி உலா வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு கோயிலை அடைந்ததும் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !