உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

கீழக்கரை: கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டிற்கான பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடந்தது.முதல்வர் எஸ்.சுமையா தலைமை வகித்து மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் பற்றி எடுத்துரைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் வேதியியல் துறை தலைவர் ராஜம்மா வரவேற்றார். அரபிக் துறை தலைவர் பாத்திமா சுரையா ஆண்டறிக்கை வாசித்தார்.உள் தர உத்தரவாத குழுவின் ஒருங்கிணைப்பாளர் சீனி ரஹ்புநிஷா, தேர்வாணையர் முத்துமாரீஸ்வரி, கல்லூரி மாணவர் செயல்பாட்டு அமைப்பு அலுவலர் லட்சுமி ஸ்ரீ உள்ளிட்ட கல்லுாரியின் பல்வேறு துறைகளைச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் இஸ்ரத் பரிதா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் பொது மேலாளர் சேக் தாவூத்கான் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ