உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயணிகள் எதிர்பார்ப்பு; இந்தியாவின் முக்கிய நகரங்களில்  இருந்து ரயில் இயக்க.. *ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

பயணிகள் எதிர்பார்ப்பு; இந்தியாவின் முக்கிய நகரங்களில்  இருந்து ரயில் இயக்க.. *ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

ராமநாதபுரம் : -இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆன்மிக சுற்றுலா தலமாக ராமேஸ்வரம் உள்ளது. மேலும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி ஆதி சிவன் கோயிலும், மரகத நடராஜர் சன்னதியும் உள்ளது. திருப்புல்லாணியில் திவ்ய தேசங்களில் ஒன்றான ஆதிஜெகநாதபெருமாள் கோயில் உள்ளது. தேவிபட்டினத்தில் நவபாஷாண நவக்கிரக கோயில் உள்ளது. சந்தனக்கூடு விழா புகழ்பெற்ற ஏர்வாடி தர்ஹாவும் உள்ளது. இதே போல் மாவட்டம் முழுவதும் ஆன்மிக தலங்கள் அதிகம் உள்ளன. ராமேஸ்வரத்திற்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இருந்தும் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் இணைக்கப்படாத நிலை உள்ளது. இந்தியாவின் தலை நகரமான புதுடில்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ைஹதராபாத், லக்னோ, மைசூரு, புனே, வாரணாசி, ஆமதாபாத், ஆக்ரா,கொச்சி, புதுச்சேரி, விசாகபட்டினம் போன்ற பல்வேறு நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் வருவதற்கு பக்தர்கள் மதுரை வந்து ரயில் மாறி ராமேஸ்வரம் வரும் நிலை உள்ளது. இந் நிலையை மாற்ற முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரம் பகுதிக்கு நேரடியாக ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இந்தப்பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வர நினைக்கும் பக்தர்கள் வசதிக்காக நேரடியாக ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் மாதவன் கூறுகையில், பாம்பன் பாலம் பணிகள் முடிக்கப்பட்டு ராமேஸ்வரம் வரை ரயில்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன. இதில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடியாக ரயில் சேவைகள் இருந்தால் பயணிகள் எளிதாக ராமேஸ்வரம் பயணிக்கும் நிலை ஏற்படும். எனவே ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முக்கியமான நகரங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நேரடி ரயில்கள் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர் என்றார். --------------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி