உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராமங்களுக்கு நீல நிற டவுன் பஸ்கள் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி

கிராமங்களுக்கு நீல நிற டவுன் பஸ்கள் இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி

திருவாடானை: தேவகோட்டை, திருவாடானையில் ஏழு கிராமங்களுக்கு புதிய டவுன் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பெரும்பாலான டவுன் பஸ்கள் பழுதடைந்து மோசமான நிலையில் ஓட்டை உடைசலாக இருப்பதால் கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நின்று விடுவது வழக்கமாக உள்ளது.இந்நிலையில் தேவகோட்டை, திருவாடானை பகுதியிலிருந்து ஏழு கிராமங்களுக்கு நீல நிற புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. நேற்று திருவாடானையில் இருந்து ஆனந்துாருக்கு இயக்கப்பட்ட புதிய பஸ்சை பார்த்து பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். தேவகோட்டை அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:தேவகோட்டை பணிமனையில் தேவகோட்டையிலிருந்து ஆறாவயல், கரூர், ஓரியூர், கல்லல், புதுக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு புதிய டவுன் பஸ்களும், திருவாடானையை மையமாக வைத்து ஆனந்துாருக்கு புதிய டவுன்பஸ் இயக்கப்பட்டுள்ளன. மற்ற கிராமங்களுக்கு செல்லும் பழைய டவுன் பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்படும். இந்த பஸ்களில் முதியோர் ஏறி, இறங்கும் வகையில் தாழ்வான படிக்கட்டுகள், தானியங்கி கதவுகள், துாரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் டிஜிட்டல் போர்டு, பஸ் விபத்தில் இருந்து விடுபட பஸ் சக்கரங்களுக்கு இடையே பயணிகள் விழுவதை தவிர்க்கும் வகையில் தடுப்பு போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தபட்டுள்ளது என்றார். நீலநிற சொகுசு பஸ்சை பார்த்து பயணிகள் வியப்படைந்து மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !