உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் அறிவிப்பு பலகையின்றி பயணிகள் தவிப்பு

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் டிஜிட்டல் அறிவிப்பு பலகையின்றி பயணிகள் தவிப்பு

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் இதுவரை இங்கு டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை, விழுப்புரம், கன்னியாகுமரி, ஓகா, பெரேஸ்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.பல ஆயிரம் பயணிகள் ரயில்களில் பயணிக்க ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர்.ரயில்களில் பயணிக்கும் பயணிகள் கடைசி நேரத்தில் அவசர கதியில் வருகின்றனர். இவர்களுக்கு ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் அறிவிப்பு பலகை ரயில் நிலையத்தில் இருந்தது.இதனை புனரமைப்பு பணிகள் காரணமாக ரயில்வே நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக பயணிகள் ரயில்கள் வருகை, புறப்படும் நேரம் தெரியாமல் தவிக்கின்றனர்.இதற்காக ஒவ்வொரு முறையும் ரயில் டிக்கெட் கவுன்டரில் கேட்டு தெரிந்து கொள்ளும் நிலை உள்ளது.பயணிகள் நலன் கருதி ராமநாதபுரம் ரயில்வே நிர்வாகம் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளை ரயில் நிலையத்தில் அமைக்க முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை