அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தொடர் மின்தடையால் நோயாளிகள் அவதி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தொடர் மின் தடையால் நோயாளிகள் அவதியடைகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவில் நுாறுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். தினமும் ராமநாதபுரம் சுற்றுவட் டாரப் பகுதியில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து சிகிச்சை பெறுவோரின் உறவினர் ஒருவர் கூறியதாவது: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மட்டு மின்றி பணியில் உள்ள செவிலியர்கள், பணி யாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அடிக்கடி மழை பெய்வதால் வெளியில் இருந்து வரும் வெளிச்சமும் இல்லை. இதனால் வார்டுக்குள் பகலில் இருள் சூழ்ந்து உள்ளது. மருத்துவமனை யில் மின்தடை ஏற் படாத வகையில் தடுக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.