/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பு
அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பு
திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் டாக்டர், மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.திருவாடானை அரசு மருத்துவமனையில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.இங்கு ஒரே ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றுவதால் நோயாளிகள் சிகிச்சைக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். துாய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையும் இருப்பதால் மருத்துவமனை சுகாதாரம் இல்லாமல் காணப்படுகிறது.ஏழை, நடுத்தர மக்கள் இந்த மருத்துவமனையை நம்பி இருப்பதால் கூடுதல் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.