உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் நாளை பகல் பத்து உற்ஸவம் துவக்கம் ஜன.10 சொர்க்கவாசல் திறப்பு

திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் நாளை பகல் பத்து உற்ஸவம் துவக்கம் ஜன.10 சொர்க்கவாசல் திறப்பு

திருப்புல்லாணி : -திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் நாளை (டிச., 31) பகல் பத்து உற்ஸவம் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு 2025 ஜன., 10 நடக்கிறது. அன்று முதல் ராப்பத்து உற்ஸவம் துவங்க உள்ளது.திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் டிச., 31 முதல் 2025 ஜன., 9 வரை பகல் பத்து உற்ஸவம் நடக்கிறது. இதை முன்னிட்டு நாளை உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. சாற்று முறை கோஷ்டி பாராயணமும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களும் பாடப்படுகிறது. முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 2025 ஜன. 10ல் காலையில் சயனக் திருக்கோலமும், இரவு 7:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.2025 ஜன. 10 முதல் 19 வரை ராப்பத்து உற்ஸவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் இரவு 7:00 மணிக்கு உற்ஸவமூர்த்தி புறப்பாடுகள் நடக்கிறது.

தைலக்காப்பு களையப்பட்டது

-------------------கடந்த 48 நாட்களுக்கு முன்பு ஆதிஜெகநாத பெருமாள், பட்டாபிஷேக ராமர், தெர்ப்பசயன ராமர் உள்ளிட்ட மூலவர்களுக்கு மூலிகை சந்தனாதி தைலத்தால் தைலக்காப்பு அணிவிக்கப்பட்டு இருந்தது. அலங்கார அணிகலன்களுடன் பக்தர்களுக்கு மூலவர்கள் தரிசனத்திற்காக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை