உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

அகவிலைப்படி உயர்வு வழங்க ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி அறிவித்துள்ளது. இது போன்று தமிழக அரசும் 2025 ஜன.,1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்து ஓய்வூதியர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலக கட்டடத்தில் நடந்தது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகரெத்தினம், பொருளாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர். இதில், 2024-25ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி அறிவித்துள்ளது. இதே போன்று மாநில அரசும் 2025 ஜன.,1 முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு 8 வது ஊதிய திருத்தத்தில் 2026 ஜன.,க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் திருத்தம் கிடையாது என்ற ஓய்வூதிய விதிகள் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவி சீதாலெட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி